/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 29, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; குடிமங்கலத்தில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சுகாதாரத்துறை சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு, தொழுநோய் பரவுதல் மற்றும் அதற்கான அறிகுறிகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து மாணவர்கள், பள்ளியின் அருகிலுள்ள குடியிருப்புகளின் வழியாக தொழு நோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திச்சென்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.