தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இயற்கை கற்றுத்தரும் பாடம்

இயற்கை கற்றுத்தரும் பாடம்

இயற்கை கற்றுத்தரும் பாடம்


UPDATED : அக் 17, 2026 05:26 PM

ADDED : அக் 17, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 05:26 PM ADDED : அக் 17, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது பின்னலாடை நகரத்தின் கதை மட்டுமல்ல; நொய்யல், நல்லாறு, கவுசிகா ஆறுகளின் கதையும் கூட. உலக இயற்கை நிதியத்தின் ‘லிவிங் பிளானட்’ அறிக்கை தரும் செய்தி அதிர்ச்சியானது.

கடந்த அரை நுாற்றாண்டில் உலகளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை 73 சதவீதம் வரை குறைந்துவிட்டதாம். அரை நுாற்றாண்டு காலத்துக்கும் மேலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களை கண்காணித்து லண்டன் உயிரியல் சங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. காடழிப்பு, எல்லை மீறிய சுரண்டல், காலநிலை மாற்றம், மாசுபாடு ஆகியவையே காரணம்.

இருளுக்கு நடுவே ஆறுதலும் உண்டு. இயற்கையின் பாடத்தை கற்றால் மீட்பு சாத்தியம். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை 3,200ல் இருந்து 5,700 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் புலி, காண்டாமிருகம், சிறுத்தை, சிங்கம் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. துாய்மையான ஆற்றலை நோக்கி இந்தியா நகர்வதும், இயற்கை விவசாயம் பெருகுவதுமே இதற்கு காரணம்.

திருப்பூர் ஏன் கவனிக்க வேண்டும்?


உலகப் பிரச்னைக்கான தீர்வு நம் ஊர் மாற்றத்தில் இருந்து தொடங்குகிறது.
தண்ணீர்: திருப்பூர் தொழில் தண்ணீரை நம்பி உள்ளது. நன்னீர் வாழ்விடங்கள் அழிவது நொய்யலை காக்க வேண்டியதன் அவசியத்தை சொல்கிறது.
பருத்தி: நஞ்சில்லாமல் பருத்தி விளைந்தால் தான் திருப்பூர் ஜவுளி உலக சந்தையில் நிலைக்கும்.
ஆற்றல்: தொழிற்கூடங்கள் சூரிய மின்சாரத்துக்கு மாறினால் உற்பத்தி செலவு குறைந்து, பசுமை ஆடை சந்தையில் முதன்மை பெறலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us