/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை
/
'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை
'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை
'மாயை' விலகட்டும்; ஆற்றல் பெருகட்டும்: இளைஞர்களுக்கு அண்ணாமலை அறிவுரை
ADDED : ஜூலை 20, 2025 11:17 PM

திருப்பூர்:''சமூக வலைதள மாயையில் இன்றைய இளைஞர்கள் சிக்கிவிடக்கூடாது'' என்று வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் முதன்மை சேவகர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பூரில் நேற்று பாரத் நேதாஜி அறக்கட்டளை துவக்க விழா நடந்தது. வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் முதன்மை சேவகர் அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, முன்னாள் ராணுவ மேஜர் மதன்குமார், பா.ஜ., கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் அறக்கட்டளையை துவக்கிவைத்தனர். பின், அண்ணாமலை பேசியதாவது:
இன்றைய இளைஞர்களுக்கு தெளிவு தேவை. எந்த வயதில் தங்களுக்கான பாதையை தேர்வு செய்ய வேண்டும்; அதற்கான நேரம் போன்ற புரிதல் முக்கியம். முழு நேர அரசியல்வாதியாக என்று அரசியலை வேலையாக செய்ய ஆரம்பித்தார்களோ, அன்று தான் தவறுகள் நடக்கத் துவங்கின.
பல இளைஞர்களுக்கு எந்த பாதையை தேர்ந்தெடுப்பதில் என்ற குழப்பம் இருந்தால், ஒரு ஆண்டு களத்துக்கு வந்து, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக பணியை செய்யுங்கள். வாரத்துக்கு, இரு நாட்கள் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று, இயற்கையோடு, மக்களுடன் எதிர்பார்ப்பு இல்லாமல் வேலை செய்யுங்கள்.
சினிமா மோகம், சமூக வலைதளம் மாயம் என, எல்லாவற்றிலும் சிக்கி, நம்மை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் யார் என்பதை,முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இருக்கும் இடத்தை விட்டு நகருங்கள். வாழ்க்கையில், 20 முதல், 30 வயதுக்குள் உங்களை நிலை நிறுத்த வேண்டும். சமூக வலைதளம் என்ற மாய வலையில் சிக்க வேண்டாம். முதலில், 'ஈகோ'வை உடைத்தால், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். உங்கள் ஆற்றலை, இந்த உலகம் பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
மாணவ, மாணவியர் சிலம்பம் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
--
திருப்பூரில் நேற்று நடந்த பாரத் நேதாஜி அறக்கட்டளை துவக்கவிழாவில், 'வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகர் அண்ணாமலை பேசினார். அருகில், இடமிருந்து: அறக்கட்டளை ஒருங்கணைப்பாளர் சரத்குமார், மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்டத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி.

