/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையங்களில் 'இணைவோம் மகிழ்வோம்' மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி
/
மையங்களில் 'இணைவோம் மகிழ்வோம்' மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி
மையங்களில் 'இணைவோம் மகிழ்வோம்' மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி
மையங்களில் 'இணைவோம் மகிழ்வோம்' மாற்றுத்திறன் மாணவர்களுக்கு போட்டி
ADDED : மார் 11, 2024 02:02 AM

உடுமலை:உடுமலை, குடிமங்கலம் பகல் நேர பாதுகாப்பு மையங்களில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் வகையில் 'இணைவோம் மகிழ்வோம்' நிகழ்ச்சி குடிமங்கலம் மற்றும் உடுமலை வட்டாரங்களில் கொண்டாடப்பட்டது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பகல்நேர பாதுகாப்பு மையங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள மாற்றுத்திறன் மாணவர்கள், மற்றவர்களுக்கு இணையாக தங்களை ஊக்கப்படுத்திக்கொள்வதற்கான நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சமவாய்ப்பை உறுதிசெய்வதற்கான நிகழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது.
புதிரை கண்டுபிடி, நடித்து விளையாடு, பலுான் விளையாட்டுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
பகல்நேர பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பகல்நேர பாதுகாப்பு மைய சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.