தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முறைகேடு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தலாமே!

 முறைகேடு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தலாமே!

 முறைகேடு குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தலாமே!


ADDED : மே 29, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் கணிசமான நபர்களிடமிருந்து, அதிகாரிகள் முறைகேடாக குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். இணைப்புக்கான தொகையை செலுத்தியும் ரசீது கொடுக்கவில்லை.

ரசீது வாங்கியவர்கள் ஆண்டுதோறும் குடிநீர் கட்டணத்தை அரசுக்கு வரியாக செலுத்தி வருகின்றனர். ஆனால், ரசீது பெறாதவர்கள் குடிநீர் கட்டணம் செலுத்துவது இல்லை. இருப்பினும், அதிகாரிகள் மக்களிடம் கணிசமான பணத்தை வசூல் செய்து விடுகின்றனர். திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் இதுதான் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஊராட்சி பகுதிகளிலுள்ள கிராமங்களில், முறையற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தினால், அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும். அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us