/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு
/
சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு
சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு
சிட்டுக்குருவிகளை காப்போம்; மாணவர்களிடம் விழிப்புணர்வு
ADDED : மார் 17, 2025 01:36 AM
திருப்பூர்; சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம், மார்ச் 20ல் கொண்டாடப்படுகிறது. பல்வேறு சூழல் மாற்றங்களால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மத்தியில், பறவை ஆர்வலர்கள் கூறியதாவது:
வீடுகளில் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து வெளியேறும், வேதியியல் கழிவு, புகை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், வீடுகளின் அருகில் வருவதற்கு சிட்டுக்குருவிகள் அச்சப்படுகின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பதற்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். வீடுகளில் இடம் உள்ள வரை தோட்டம் அமைப்பது, அந்த தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பூச்சிக்கொல்லி, ரசாயன மருந்துகள் தெளிக்காமல் அவற்றை இயற்கை முறையில் பராமரிக்க வேண்டும்.
முடிந்த வரை வீட்டிற்கு வெளியில் அல்லது மாடி தளங்களில் தண்ணீர் வைப்பது, தானியங்களை துாவி அவற்றுக்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் சிட்டுக்குருவியை வரவேற்கும்.