/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பள பேச்சு உடனே துவங்க வேண்டும் பாத்திர தொழிற்சங்கங்கள் கடிதம்
/
சம்பள பேச்சு உடனே துவங்க வேண்டும் பாத்திர தொழிற்சங்கங்கள் கடிதம்
சம்பள பேச்சு உடனே துவங்க வேண்டும் பாத்திர தொழிற்சங்கங்கள் கடிதம்
சம்பள பேச்சு உடனே துவங்க வேண்டும் பாத்திர தொழிற்சங்கங்கள் கடிதம்
ADDED : டிச 28, 2025 07:00 AM

அனுப்பர்பாளையம்: -திருப்பூர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கடந்த 2023 ஜனவரி மாதம் போடப்பட்ட சம்பள ஒப்பந்தம், வரும் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து, எவர் சில்வர் மற்றும் பித்தளை, செம்பு பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கடிதம் அனுப்பி இருந்தனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், தேர்தல் முடிந்தவுடன் கூலி உயர்வு சம்பந்தமாக பேசி நல்ல முறையில் தீர்வு காணலாம். என தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பதில் கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து, அனைத்து பாத்திர தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் நேற்று அனுப்பர் பாளையம் எல்.பி.எப். சங்க அலுவலகத்தில் நடந்தது. ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), ஈஸ்வரன் (ஐ.என்.டி.யு.சி.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), அர்ஜுனன்(காமாட்சி அம்மன் சங்கம்), குணசேகரன் (ஏ.டி.பி.), ரத்தினசாமி (எல்.பி.எப்.) ஆகியோர் கலந்து கொண்டனர்.
எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உடனடியாக பேச்சு வார்த்தை தொடங்கி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்று தரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
''பித்தளை, செம்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கு தொழிற்சங்கத்தினர் அனுப்பிய கடிதத்திற்கு அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை'' என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

