/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாழ்க்கை என்றால் போராடும் போர்: 'தடங்கல் நமூனா' ரத்து செய்யணும் தாசில்தாரிடம் வியாபாரிகள் முறையீடு
/
வாழ்க்கை என்றால் போராடும் போர்: 'தடங்கல் நமூனா' ரத்து செய்யணும் தாசில்தாரிடம் வியாபாரிகள் முறையீடு
வாழ்க்கை என்றால் போராடும் போர்: 'தடங்கல் நமூனா' ரத்து செய்யணும் தாசில்தாரிடம் வியாபாரிகள் முறையீடு
வாழ்க்கை என்றால் போராடும் போர்: 'தடங்கல் நமூனா' ரத்து செய்யணும் தாசில்தாரிடம் வியாபாரிகள் முறையீடு
ADDED : ஏப் 02, 2025 07:14 AM

அவிநாசி : அவிநாசி பேரூராட்சி க.ச.எண்: 85 டி மற்றும் இ-ல் சொத்துக்கள் மீதும் எந்த பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி கோவில் செயல் அலுவலர் அவிநாசி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு 'தடங்கள் நமூனா' கொடுத்துள்ளார். இதனால், மேற்படி காலை எண்ணில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும் குறிப்பிட்டு செயல் அலுவலர் தடையானை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் ஒட்டு மொத்தமாக 85டி, இ என குறிப்பிட்டதால், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை வங்கியில் அடமானம் வைப்பதற்கோ, கல்வி கடன் பெறுவதற்கோ, சொத்தை விற்பதற்கோ அல்லது அடமானம் வைக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்காக செயல் அலுவலரை, கண்டித்து நேற்று திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் உள்ள செயல் அலுவலர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த பூண்டி போலீசார் இன்ஸ்பெக்டர் இளங்கோ, ரத வீதி வியாபாரிகள், சொத்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நாளை (இன்று) நில அளவை பிரிவினர் வாயிலாக, பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அளந்து தர, தாசில்தார் சந்திரசேகரிடம் பேசியுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனால், நேற்று நடைபெறுவதாக இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, தாலுகா அலுவலகம் சென்ற வியாபாரிகள் சங்கத்தினர், துணை தாசில்தார் ஜெனிட்டாவிடம், தங்களது பிரச்னை குறித்த முறையிட்டனர்.
அப்போது பேசிய துணை தாசில்தார், 'உங்கள் பிரச்னை குறித்து, தாசில்தாரிடம் தகவல் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று உறுதியளித்தார். இதனால், வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

