/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர் காக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு... சொந்த கட்டடமில்லை! மடத்துக்குளம் தாலுகாவில் இந்த நிலை மாறுமா?
/
உயிர் காக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு... சொந்த கட்டடமில்லை! மடத்துக்குளம் தாலுகாவில் இந்த நிலை மாறுமா?
உயிர் காக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு... சொந்த கட்டடமில்லை! மடத்துக்குளம் தாலுகாவில் இந்த நிலை மாறுமா?
உயிர் காக்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு... சொந்த கட்டடமில்லை! மடத்துக்குளம் தாலுகாவில் இந்த நிலை மாறுமா?
ADDED : அக் 03, 2024 04:34 AM
உடுமலை : மடத்துக்குளம் தாலுகாவில் செயல்படும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை நீண்ட காலமாக மேம்படுத்தப்படாமல் இருப்பதால், அவசர மருத்துவ சிகிச்சை கூட கிடைக்காத நிலை தொடர்கிறது.
மடத்துக்குளம் தாலுகாவில், 11 ஊராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகள் உள்ளன. ஏறத்தாழ, மூன்று லட்சம் பேர் வசிக்கும் நிலையில், மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லை.
மடத்துக்குளத்திலுள்ள அரசு மருத்துவமனையில், போதிய வசதிகள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், அவசர மருத்து சிகிச்சை மற்றும் பல்வேறு சிகிச்சைகளுக்கு உடுமலை மற்றும் கோவை மருத்துவமனைகளை சார்ந்து இருக்கும் அவல நிலையே உள்ளது. மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும், போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே போல், மடத்துக்குளம் தாலுகாவில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை மருத்துவ தேவைகளுக்காக சுகாதாரத்துறை சார்பில், கணியூர் அரசு முதன்மை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், 19 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான சிகிச்சை, தடுப்பூசி மற்றும் காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை சார்ந்து இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இதில், அரியநாச்சிபாளையம், கணியூர், மடத்துக்குளம், கொமரலிங்கம், குப்பம்பாளையம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன.
போதிய வசதிகள் இல்லாமல் செயல்படும் துணை சுகாதார நிலையங்களுக்கு, சொந்தமாக இடம் தேர்வு செய்து, அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட வேண்டும்.
மேலும், காரத்தொழுவு, கொழுமம், என்.ஜி.,புதுார், நீலம்பூர், மைவாடி ஆகிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள், பழமையானதாகவும், பராமரிப்பின்றி சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ளன.
அதே போல், கடத்தூர், ஆர்.ஜி.,புதூர், துங்காவி, மைவாடி, கொழுமம், பாப்பான்குளம், நீலம்பூர், ருத்ராபாளையம், போத்தநாயக்கனூர், சாமராயப்பட்டி, சோழமாதேவி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை புதுப்பித்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளை மேம் படுத்த வேண்டும்.
துணை சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், செவிலியர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தவும், கணியூர் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை அதிகரிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.