/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்கோபுரத்தில் விளக்குகள் மாயம்: இருளில் தவிக்கும் மக்கள்
/
மின்கோபுரத்தில் விளக்குகள் மாயம்: இருளில் தவிக்கும் மக்கள்
மின்கோபுரத்தில் விளக்குகள் மாயம்: இருளில் தவிக்கும் மக்கள்
மின்கோபுரத்தில் விளக்குகள் மாயம்: இருளில் தவிக்கும் மக்கள்
ADDED : நவ 05, 2025 08:15 PM

உடுமலை: பெதப்பம்பட்டி உயர் மின்கோபுரத்தில், மின் விளக்குகள் மாயமாகியும் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால், இருளில் மக்கள் பாதித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு பெதப்பம்பட்டியில் அமைந்துள்ளது.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதியில், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை சந்திப்பு விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, உயர் மின்கோபுர விளக்கும் அமைக்கப்பட்டது. இதனால், நால்ரோட்டில் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள், இருளில் தவிப்பது தவிர்க்கப்பட்டது.
இந்த உயர் மின் கோபுர பராமரிப்பை, சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. உயர் மின் கோபுரத்தில், 2 விளக்குகள் மாயமாகியுள்ளது; பிற விளக்குகளும் முறையாக எரிவதில்லை.
இதனால், இருளில் அச்சத்துடன் மக்கள் அப்பகுதியில் காத்திருக்க வேண்டியுள்ளது. இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளதால், குறுகலான இடத்தில், இருளில் நிற்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். உயர் மின்கோபுரத்தில், மாயமான விளக்குகளை பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
உயர் மின் கோபுர விளக்கை, நால்ரோட்டின் மையத்தில் அமைத்து ரவுண்டானா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

