/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைப்பு ரோடு... இப்படியிருந்தா எப்படி? மாநகராட்சியிடம் பொதுமக்கள் கேள்வி
/
இணைப்பு ரோடு... இப்படியிருந்தா எப்படி? மாநகராட்சியிடம் பொதுமக்கள் கேள்வி
இணைப்பு ரோடு... இப்படியிருந்தா எப்படி? மாநகராட்சியிடம் பொதுமக்கள் கேள்வி
இணைப்பு ரோடு... இப்படியிருந்தா எப்படி? மாநகராட்சியிடம் பொதுமக்கள் கேள்வி
ADDED : ஜன 29, 2025 03:50 AM

திருப்பூர்; திருப்பூரில், பல்லடம் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டை இணைக்கும் ரோடு மிக மோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
பல்லடம் ரோட்டிலிருந்து வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், பூங்காநகர் வழியாக தாராபுரம் ரோடு கோவில் வழியை இணைக்கும் வகையில் பிரதான ரோடு உள்ளது. வளர்ந்து வரும் குடியிருப்புகள் இந்த பாதையில் அமைந்துள்ளது. இதில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மாநகராட்சி சார்பில் கடந்த இரு ஆண்டாக இவ்வழியாக நான்காவது குடிநீர் திட்டத்துக்கான பிரதான குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு பகுதியில் இடம் தொடர்பான பிரச்னை காரணமாக குழாய் பதிப்பு பணி சில மாதங்கள் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது. அதன்பின் பணி தொடர்ந்து மேற்கொண்டு குழாய் பதிப்பு பணி முழுமையாக நடந்து முடிந்தது. இப்பணி முடிந்து மாதக்கணக்காகியும், குழி தோண்டும் போது சேதமான ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால், குண்டும் குழியுமாக ரோடு மாறிவிட்டது. மேலும், வாகனங்கள் செல்லும் போது, மண் புழுதி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வாகனங்கள் பழுதடைவதும், சிறு விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைவதும் சகஜமாகி விட்டது.
எனவே, இந்த ரோட்டை உடனடியாக சீரமைத்து இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

