/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பரிதாப நிலையில் இணைப்பு ரோடு : புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
/
பரிதாப நிலையில் இணைப்பு ரோடு : புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
பரிதாப நிலையில் இணைப்பு ரோடு : புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
பரிதாப நிலையில் இணைப்பு ரோடு : புதுப்பிக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2025 11:15 PM
உடுமலை: உடுமலை ஒன்றியம், உடுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து, குண்டலப்பட்டி வரை, 2 கி.மீ.,க்கு கிராம இணைப்பு ரோடு 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த ரோட்டை பல கிராம மக்களும், விவசாயிகள் இடுபொருள், விளைபொருள் கொண்டு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உடுக்கம்பாளையம் கிராமத்துக்கு, கனரக வாகனங்கள் இந்த வழியாகவே செல்ல முடியும்.
இந்நிலையில், நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல், ரோடு, குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது. இதனால், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக சென்றால், பழுதடையும் அளவுக்கு ரோட்டின் நிலை மாறி விட்டது. கனரக வாகனங்கள் பல கி.மீ., தொலைவு சுற்றி கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என பல முறை அப்பகுதி கிராம மக்கள் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதைக்கண்டித்து விரைவில் போாரட்டம் நடத்தவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.