/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்களில் மது விற்பனை 'ஜோர்' ; பா.ஜ., முற்றுகையால் மூவர் கைது
/
பார்களில் மது விற்பனை 'ஜோர்' ; பா.ஜ., முற்றுகையால் மூவர் கைது
பார்களில் மது விற்பனை 'ஜோர்' ; பா.ஜ., முற்றுகையால் மூவர் கைது
பார்களில் மது விற்பனை 'ஜோர்' ; பா.ஜ., முற்றுகையால் மூவர் கைது
ADDED : மார் 09, 2026 04:33 AM

திருப்பூர்: சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து, திருப்பூர், 'டாஸ்மாக்' மதுக்கூடங்களை, பா.ஜ.,வினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில் மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள், 'பார்' எனும் மதுக்கூடங்களுடன் செயல்படுகின்றன. இந்த மதுக்கூடங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வினர், அப்பகுதியை சேர்ந்த பெண்களுடன் நேற்று சென்று, மதுக்கூடங்களை முற்றுகையிட்டனர். பா.ஜ.,வினரின் போராட்டத்தை அறிந்த போலீசார், அங்கு சென்று பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
அந்த மதுக்கூடங்களில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ராஜபாண்டி, 44, மதியழகன், 32, அருண்குமார், 29, ஆகிய மூவரை கைது செய்து, 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.