/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லிட்டில் கிங்டம் பள்ளி விழா :மாணவ, மாணவியர் உற்சாகம்
/
லிட்டில் கிங்டம் பள்ளி விழா :மாணவ, மாணவியர் உற்சாகம்
லிட்டில் கிங்டம் பள்ளி விழா :மாணவ, மாணவியர் உற்சாகம்
லிட்டில் கிங்டம் பள்ளி விழா :மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : ஜன 22, 2024 01:03 AM

திருப்பூர்;திருப்பூர் அருகே சோளிபாளையத்தில் அமைந்துள்ள லிட்டில் கிங்டம் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஜூனியர் பள்ளியின், 24வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில், ஐந்தாம் வகுப்பு மாணவி பிரதிஷா வரவேற்றார். 'தைரோகேர்' நிறுவனர் டாக்டர் வேலுமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி அடைய கவனம், கற்றல், வளர்ச்சி, மகிழ்ச்சி வேண்டும் என்பதை, அவருடைய வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு உதாரணங்களுடன் விளக்கினார்.
அதன்பின், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பழக்க வழக்கம் ஆகியவற்றை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில், பள்ளியின் தீபம் அறக்கட்டளை உறுப்பினர்கள், நிறுவனர், தாளாளர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர், பள்ளி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் சஞ்சய், நன்றி கூறினார்.
ஆண்டு விழாவில், பள்ளி மாணவ, மாணவியர் குதுாகலத்துடன் பங்கேற்றனர்.