/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாபெட்' சான்று பெற்ற லிட்டில் கிங்டம் பள்ளி
/
'நாபெட்' சான்று பெற்ற லிட்டில் கிங்டம் பள்ளி
ADDED : ஜன 09, 2024 12:47 AM

திருப்பூர்;திருப்பூர், லிட்டில் கிங்டம் பள்ளி, 2010ம் ஆண்டு நாபெட் சான்றிதழுக்கு விண்ணப்பித்தது. அவ்வமைப்பினர், 2011ம் ஆண்டு, பள்ளிக்கு வந்து, ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.
அதன்பின், 2021ல் இணையவழி மூலம் ஆய்வு செய்த குழுவினர், அதற்குரிய மதிப்பெண்ணை வழங்கி, அடுத்த என்னென்ன முயற்சி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து, கடந்த, 2023ம் செப்., மாதம் 15 மற்றும், 16 ம் தேதி இரண்டு நாட்கள், பள்ளிக்கு நேரில் வந்த, இந்திய தரச்சான்றிதழ் நிறுவன குழுவினர் ஆய்வு நடத்தினர். அதனை தொடர்ந்து, தரமான பள்ளி என லிட்டில் கிங்டம் பள்ளிக்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். தமிழக அளவில், 15 பள்ளிகள் மட்டும் 'நாபெட்' தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. அப்பள்ளிகள் பட்டியலில் லிட்டில் கிங்டம் பள்ளியும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.