/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்! இன்னல் தீர்க்கும் திட்டங்களும் அவசியம்
/
கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்! இன்னல் தீர்க்கும் திட்டங்களும் அவசியம்
கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்! இன்னல் தீர்க்கும் திட்டங்களும் அவசியம்
கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கம்! இன்னல் தீர்க்கும் திட்டங்களும் அவசியம்
ADDED : நவ 20, 2024 12:41 AM
திருப்பூர்; நாடு முழுக்க ஐந்தாண்டுக்கு ஒரு முறை கால்நடை கணக்கெடுப்புப்பணி நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தான் மத்திய, மாநில அரசுகள் சார்பில், கால்நடை வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் வகுக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த, 2019ல், 20வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்தாண்டு இடைவெளிக்கு பின், தற்போது, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது; கணக்கெடுப்பு பணி துவங்கியும் உள்ளது; அடுத்தாண்டு, பிப்., வரை இப்பணி நடக்கும்.
திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணியில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும், 47 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், நகர்ப்புறங்களிலும் இக்கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.கால்நடை உள்ள மற்றும் இல்லாத வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள், இறைச்சி, முட்டைக்கோழி பண்ணை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார், மொபைல் எண், அவர்களின் பிரதான தொழில், கல்வித்தகுதி, கால்நடைகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். 'தற்போது, 100 வருவாய் கிராமங்களில் இப்பணி துவங்கிவிட்டது' என, கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'கால்நடை கணக்கெடுப்பு என்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் கால்நடை வளர்ப்பு பணி என்பதும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. தீவனப்பற்றாக்குறை, அவற்றின் விலையேற்றம் என, பல்வேறு பிரச்னைகளை கால்நடை வளர்ப்போர் எதிர்கொண்டுள்ள நிலையில், கணக்கெடுப்பு பணியுடன் சேர்ந்து இத்தகைய பிரச்னைகளுக்கான தீர்வும் அரசு அதிகாரிகளால் ஆலோசிக்கப்பட வேண்டும்,' என்றனர்.

