நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை திங்கள்தோறும் நடக்கிறது. நேற்று நடந்த சந்தைக்கு, 855 மாடுகள் வரத்தாக இருந்தது. கன்று, 3,000 - 4,000, காளை, 23,000 - 28,000, எருமை, 28 ஆயிரம் - 32 ஆயிரம், பசு மாடு, 28,000 - 34,000 ரூபாய்க்கு விற்றது.
'கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் மாடுகள் விலையில் மாற்றமில்லை. காளை, எருமை விலை, ஆயிரம் முதல், 1,500 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. பண்டிகை நிறைவு பெற்று, சீசன் இல்லை. இருப்பினும், வரத்து குறைந்துள்ள நிலையில், விலை மெல்ல உயர துவங்கியுள்ளது,' என, மாட்டுச்சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.