/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டியே கிடக்கும் பூங்கா சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
பூட்டியே கிடக்கும் பூங்கா சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
பூட்டியே கிடக்கும் பூங்கா சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
பூட்டியே கிடக்கும் பூங்கா சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : பிப் 22, 2024 05:22 AM
உடுமலை: உடுமலை அருகே, திருமூர்த்திமலையில் சில ஆண்டுகளுக்கு முன், பொதுப்பணித்துறை சார்பில், காண்டூர் கால்வாய் அருகே, சிறுவர் பூங்கா ஏற்படுத்தப்பட்டது.
சில வாரங்கள் மட்டும், விளையாட்டு உபகரணங்களுடன், பயன்பாட்டில், இந்த பூங்கா இருந்தது. இந்த பூங்காவுக்கு எதிரில், பெரிய மரத்தடியில், மக்கள் அமரும் இருக்கையுடன், கால்நடைகள் சிலைகளுடன், சிறிய பூங்கா உருவாக்கப்பட்டது.
இப்பூங்காவும், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும், பூங்காவை திறந்தால், சுற்றுலா பயணியர், 'ரிலாக்ஸ்' செய்ய வசதியாக இருக்கும். இது குறித்து பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.