sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்னை:செயல் திட்டம் வகுத்த மாநகராட்சி நிர்வாகம்

/

 காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்னை:செயல் திட்டம் வகுத்த மாநகராட்சி நிர்வாகம்

 காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்னை:செயல் திட்டம் வகுத்த மாநகராட்சி நிர்வாகம்

 காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்னை:செயல் திட்டம் வகுத்த மாநகராட்சி நிர்வாகம்


ADDED : நவ 20, 2025 03:08 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் காலங்காலமாக நிலவிய குப்பை பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'எஸ்ஓபி' எனப்படும் 'நிலையான செயல் திட்டம்' அமல்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகள் துவங்கி, தொழில் நிறுவனம் வரை குப்பை தரம் பிரிக்கும் பணியில் முழு கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண் மை திட்டம், 2016; நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998ன் படி, திருப்பூர் மாநகராட்சி சார்பில் திட்டமிட்டுள்ள நிலையான செயல் திட்டம் குறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் மகேஸ்வரி பேசியதாவது:

குப்பை உருவாவது அடிப்படை விஷயம் தான்; அதை மேலாண்மை செய்வது, மாநகராட்சியின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் கடமை என்பதையும் உணர வேண்டும். வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைபை மக்கும், மக்காத குப்பையென தரம் பிரித்து, வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பாலிதின் உள்ளிட்ட உலர் கழிவுகள், இனி, வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே வீடுகளில் இருந்து பெறப்படும்.

அதுவரை அவற்றை பொது இடங்களில் வீசியெறியாமல் சேகரித்து வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள குப்பையை எவ்வாறு தரம் பிரித்து கையாள்வது என்பது குறித்த பயிற்சி வழங்கும் பணியில் தனியார் ஏஜன்ஸியினர் வாயிலாக, 60 தன்னார்வலர்கள்கள் ஈடுபடுவர்.

வீசினால் அபராதம் பொதுமக்களால் அதிகளவில் குப்பை வீசியெறியப்படும் பகுதிகள், 'குப்பை அபாய பகுதி' என வகைப்படுத்தப்படும். அந்த இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தி, குப்பை வீசியெறிவோருக்கு, பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். அத்தகைய குப்பை குவியும் இடங்களில், மரக்கன்று நடுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்; இப்பணிக்கென, 7 கோடி ரூபாய் நிதி, அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள, 60 வார்டில், முதற்கட்டமாக, 20 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு, 15 முதல், 20 நாட்களுக்குள், 100 சதவீதம் குப்பை தரம் பிரித்து பெறும் நிலையை உருவாக்கி, அவை 'மாடல் வார்டு'களாக மாற்றப்படும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும்; மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுடன் இணைந்து, தன்னார்வ அமைப்பினரும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us