/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மைசூர் பல்லக்கில் சிவன்மலை சுப்ரமணியசுவாமி திருமலை வலம்:பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

ADDED : பிப் 10, 2025 05:27 PM

காங்கேயம்;சிவன்மலை முருகன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, சுப்ரமணியசுவாமி மைசூர் பல்லக்கில் திருமலையை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மைசூர் பல்லக்கில் திருமலை வரும் நிகழ்ச்சியில், பல்லக்கில் சிவன்மலை முருகன் சிறப்பு அலங்காரத்தில் தனியாகவும், அவருக்கு எதிரே வள்ளியும், தெய்வானையும் அலங்கரிக்கப்பட்டு திருமலை வலம் வருதல் நிகழ்ச்சி இன்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. சிவன்மலை கிரிவலப் பாதையில் நடைபெற்ற இந்த திருவுலாக் காட்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் நாளை காலை 6:00 மணிக்கு சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. இதற்காக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் அமைச்சர், இந்து சயம அறநிலைய துறையினர், பக்தர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.