sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்

/

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமான்! பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்


ADDED : செப் 02, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும், ஆவணி மூலநட்சத்திர வழிபாடும் கோலாகலமாக நேற்று நடந்தது.

மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆண்ட போது, வந்தியம்மை என்ற வாணிய குல பெண் வாழ்ந்துவந்தார்; சிவபக்தையான அவர், பிட்டு விற்பனை செய்து வந்தார். வைகை கரை உடைப்பை சரிசெய்ய, வந்தியம்மைக்கு பதிலாக கூலி ஆள் வேடத்தில் வந்த சிவபெருமான் வேலை செய்தார்.

வேலைசெய்யாமல் உறங்கிய அவரை, பணியை பார்வையிட வந்த பாண்டியன் பிரம்பால் அடித்தான். அந்த அடி, அனைவரது முதுகிலும் விழுந்தது. பிறகு, சிவபெருமான் வந்தியம்மையை ஆட்கொண்டு அருளினார். அதன்படி, ஆவணி மாதத்தில் வரும் மூலநட்சத்திர நாளில், பிட்டுக்கு மண் சுமந்த படலம், சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.

திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், திருப்பூர் வாணிய செட்டியார் சமூகம் சார்பில், 73 வது ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அபிேஷகமும், இரவு, 700 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து, மகாதீபாராதனை நடந்தது.

 எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், திருப்பூர் மாவட்ட வாணியர் சங்கம் சார்பில், 2ம் ஆண்டு பிட்டுத்திருவிழா நேற்று நடந்தது. காலை, 11:00 மணிக்கு, ஆவுடைநாயகி, சுக்ரீஸ்வரருக்கு மகா அபிேஷகமும், பிட்டுக்கு மண் சுமந்த படல காட்சியும், தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. சிவனடியார்களின் சிவகண வாத்திய இன்னிசையுடன், பிட்டுத்திருவிழா விமரிசையாக நடந்தது.

 அவிநாசி வாணியர் சங்கம் சார்பில், 142ம் ஆண்டு பிட்டுத்திருவிழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று விமரிசையாக நடைபெற்றது . இதையொட்டி, சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.

அதனை தொடர்ந்து, ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றினை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் விதமாக நான்கு ரத வீதிகளிலும் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, எம்பெருமானை வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பச்சரிசி பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us