/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி
/
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார் உழவாரப்பணி
ADDED : ஜூன் 02, 2025 06:20 AM

திருப்பூர் : வைகாசிவிசாக தேர்த்திருவிழாவையொட்டி, திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நேற்று நடந்தது.
திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், கோவில் வளாகம், மேல்தளம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன; நவீன கருவியை கொண்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து, கோபுரம், கற்துாண்கள் மற்றும் சுவர்கள் சுத்தம் செய்யப்பட்டன.
கொடிமரம் மற்றும் கோவில் தளங்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.பூஜைக்கு பயன்படுத்தும் பித்தளை பொருட்கள், விளக்கு ஸ்டாண்ட்கள், சுவாமி அபிேஷக ஸ்டாண்ட்கள் சுத்தம் செய்யப்பட்டன.
மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பயன்படுத்தும் ஆடைகள், திரைச்சேலைகளும், சலவை செய்து கொடுக்கப்பட்டன. 60 பெண்கள் உட்பட, 150க்கும் அதிகமானவர்கள், உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.
இதனால், நேற்று பகல் நேர சுவாமி தரிசனம் நடக்கவில்லை; மாலையில் இருந்து, வழக்கம் போல் பூஜைகள் நடந்தன.