/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இரும்புத்தாது கழிவு மண் கொட்ட வந்த லாரி பறிமுதல்
/
இரும்புத்தாது கழிவு மண் கொட்ட வந்த லாரி பறிமுதல்
ADDED : செப் 08, 2025 11:09 PM

அவிநாசி; அவிநாசி அருகே இரும்பு தாது கழிவு மண்ணை விவசாய நிலத்தில் கொட்ட வந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் முருகேஷூக்கு, சொந்தமாக, கரட்டுமேடு பகுதியில் உள்ளது. தோட்டத்தில், இரும்பு தாது கழிவு மண்ணை கொட்டி வந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு விவசாய நிலத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதால், இரும்புத்தாது கழிவு மண்ணை கொட்டக் கூடாது என அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும், இரவு நேரங்களில் டிப்பர் லாரி மூலம் கழிவு மண் கொட்டப்பட்டு வந்தது. அவ்வாறு, நேற்று முன்தினம் இரும்பு கழிவு தாது மண்ணை கொட்ட வந்த டிப்பர் லாரியை விவசாயிகள் டிப்பர் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேவூர் போலீசார், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
'இனிமேல் இரும்பு தாது கழிவு மண்ணை கொட்ட கூடாது,' என லாரி டிரைவர், உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து அவிநாசி தாலுகா அலுவலகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.