ADDED : ஜூன் 17, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:கிராவல்
மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, தாராபுரம்-பொள்ளாச்சி
ரோட்டில், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், வி.ஏ.ஓ. சந்திரசேகர்
ஆகியோர், நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
பொன்னாபுரத்தில் ஒரு லாரியை
சோதனை செய்தபோது, கிராவல் மண் ஏற்றிச் செல்வது தெரிந்தது. உரிய
ஆவணங்கள் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.
