ADDED : ஜூலை 10, 2026 12:06 AM
அ நிறம் | அளவு
காங்கயம்: ஊதியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாகக் கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கனிமவளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. ஊதியூர் நிழலி பகுதியில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திச் சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதிகாரிகளைக் கண்டதும் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் அங்கிருந்து தப்பியோடினர்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜே.சி.பி. வாகனத்தைக் கனிமவளத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தப்பியோடிய நபர்கள் குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
