ADDED : ஜூன் 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே உள்ள சங்கரண்டம்பாளையம், பூங்கா
துறையில் உரிமம் இன்றி லாரியில் கற்கள் கடத்தப்படுவதாக வருவாய் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,
அவ்வழியாக வந்த லாரியை பிடித்து விசாரித்ததில், 20 டன் கற்கள் இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிரைவர் சந்தானகிருஷ்ணன், 46, மீது வழக்கு பதிவு செய்த ஊதியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.