/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலையில் லாரிப்பேட்டை விபத்துக்கு வழிவகுக்கும்
/
நெடுஞ்சாலையில் லாரிப்பேட்டை விபத்துக்கு வழிவகுக்கும்
நெடுஞ்சாலையில் லாரிப்பேட்டை விபத்துக்கு வழிவகுக்கும்
நெடுஞ்சாலையில் லாரிப்பேட்டை விபத்துக்கு வழிவகுக்கும்
ADDED : டிச 09, 2024 07:30 AM

பல்லடம் : பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் உருவாகியுள்ள லாரிப்பேட்டையால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடத்தில், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சரக்கு மற்றும் வாகன போக்குவரத்துக்கு பிரதான சாலையாக உள்ளது. சரக்கு வாகனங்கள், கன்டெய்னர் மற்றும் டிப்பர் லாரிகள், ஆம்புலன்ஸ்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் என, தினசரி, பல ஆயிரம் வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன.
வாகன போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ரோடு விரிவாக்க பணிகள், பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில், லாரிகள் அடுத்தடுத்து நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, மாதப்பூர் சமத்துவபுரம் அருகே, கன்டெய்னர்கள், சரக்கு லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், இப்பகுதி லாரிப்பேட்டையாக உருவாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், லாரிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டதால், தேவையற்ற வாகன நெரிசல் மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
பார்க்கிங் செய்ய வேண்டி லாரிகள் திடீரென இடதுபுறம் திரும்புவதும், வலதுபுறம் செல்வதுமாக இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் உருவாகி, விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.