/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை
/
லாரி டிரைவரை தாக்கி ரூ.1.25 லட்சம் கொள்ளை
ADDED : மார் 18, 2025 05:27 AM
பொங்கலுார்: லாரி டிரைவரை தாக்கி, 1.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 40; லாரி டிரைவர். பொள்ளாச்சியில் இருந்து லாரியில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு பல்லடம் வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே அனுப்பட்டி தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். லாரியை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். அவர் லாரியை நிறுத்தி உள்ளார். அவர்கள் நால்வரும் அவரை அடித்து உதைத்து, அவரிடம் இருந்த, 1.25 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்று விட்டனர்.
இது குறித்து, சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.