/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் உயிர் தப்பினார்
/
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி; டிரைவர் உயிர் தப்பினார்
ADDED : ஜூன் 24, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நாமக்கல், ராசிபுரத்தை சேர்ந்தவர் முருகன், 45; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சாமளாபுரம் அருகில் உள்ள மில் ஒன்றில், பஞ்சு பொதி ஏற்றி கொண்டு, மும்பை செல்ல லாரியை கிளப்பினர்.
அப்போது, லாரி எதிர்பாராத விதமாக பள்ளத்தில் இறங்கி, ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். கவிழ்ந்த லாரியை, கிரேன் மூலம் மீட்டனர். விபத்து குறித்து மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.