தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தவற விட்ட பர்ஸ் ஒப்படைப்பு

தவற விட்ட பர்ஸ் ஒப்படைப்பு

தவற விட்ட பர்ஸ் ஒப்படைப்பு


ADDED : நவ 30, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 04:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் அவிநாசி வழியாக வந்தது. அவிநாசி, சூளை பஸ் ஸ்டாப்பில் காமிலா என்பவர் பஸ்சில் ஏறி, திருப்பூருக்கு பயணித்தார். அந்த பெண் பர்ஸ் மற்றும் மொபைல் போனை பஸ்சில் தவற விட்டு, திருப்பூரில் இறங்கி விட்டார்.

பஸ்சில் தவற விட்டு சென்ற பொருட்களை டிரைவர் வேல்முருகன், நடத்துனர் ராமு ஆகியோர் கண்டெடுத்து, அந்த பெண் பஸ் ஏறிய அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர். பெண் பயணிக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரிடம் நேரடியாக பஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். இருவரையும், அனைவரும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us