sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புத்தகம் நேசியுங்கள்; உலகத்தை 'வாசியுங்கள்'

/

புத்தகம் நேசியுங்கள்; உலகத்தை 'வாசியுங்கள்'

புத்தகம் நேசியுங்கள்; உலகத்தை 'வாசியுங்கள்'

புத்தகம் நேசியுங்கள்; உலகத்தை 'வாசியுங்கள்'


ADDED : ஆக 08, 2025 11:40 PM

Google News

ADDED : ஆக 08, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ந ம் சுவாசத்துடன் கலந்திருக்கும் வாசிப்புப்பயிற்சி, மனிதனை, சமுதாயத்தின் தனித்துவ அடையாளமாக காட்டுகிறது. வாசிப்பு மீதான ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக தான், ஆண்டுதோறும், ஆக., 9ம் தேதி, 'தேசிய புத்தக நேசிப்பாளர்கள் தினம்' கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பை நேசிக்கும் சிலரது கருத்துகளை இங்கே பகிர்கிறோம்.

வாசிப்பும் தியானமே! சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்: வீட்டில் கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கும் போது, காற்றும், வெளிச்சமும் உள்ளே வரும் உணர்வு தான், புத்தகங்களை வாசிக்கும் போதும் கிடைக்கும். பக்கத்து வீடு, வீதி, தெருவில் வசிப்பவர்களுடன் கூட பழக முடியாத நகர சூழலில், புத்தகம் வசிக்கும் போது, பல்வேறு நாட்டு மக்களின் வாழ்வியல் சூழல், கலாசாரம், பாரம்பரியத்தை அறிந்து, அவர்களுடன் மனதளவில் பழக முடியும். தனிமைப்படுத்தப்பட்ட மனிதன், சமூகத்தில் இருந்து துண்டிக்கப்படாமல் இருக்க புத்தகங்கள் உதவுகின்றன.

'டிவி' உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் தான் மனம் லயிக்கும். ஆனால், புத்தகம் வாசிக்கும் போது, அந்த கதையையொட்டிய யதார்த்தம் மற்றும் கற்பனை உலகில் மிதக்க முடியும்; கவனச்சிதறல் ஏற்படாது; சிந்தனை மேம்படும்; வாசிப்பு என்பதும், ஒருவகை தியானம் தான்.

தனித்துவம்கிடைக்கும் பாசிதாபானு, பேச்சாளர், பாண்டியன் நகர்: யாரும் கைவிட்ட நிலையிலும், நம்மை புத்தகங்கள் அரவணைத்துக் கொள்ளும். மனம் சோர்வடையும் போது, புத்தகம் படித்தால், மனம் இலகுவாகும்; தைரியம் பிறக்கும். பட்டிமன்ற பேச்சாளர், ஆசிரியை என்ற முறையில் என் தனித்திறமையை வளர்த்து, படிப்படியாக உயர புத்தகங்கள் தான் உதவின.

பாடப்புத்தகங்களை கடந்து, பிற புத்தகங்களை படிக்கும் போது தான், உலகளாவிய அறிவாற்றல் கிடைக்கும். புத்தகம், ஒரு மனிதனை பண்புள்ள, பக்குவமுள்ள வர்களாக மாற்றுகிறது. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தனித்துவம் நிறைந்தவர்களாக இருப்பர்.

மனம் இலகுவாகும் நித்தீஷ்வரன், மாணவர், சிக்கண்ணா அரசு கல்லுாரி: புத்தக வாசிப்பு மனதை இலகு வாக்குகிறது; தன்னம்பிக்கை தருகிறது. தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களின் மனதை கூட மாற்றி, அவர்களின் வாழ்க்கையை திசை மாற்றும் ஆற்றல் புத்தகங்களுக்கு உண்டு. நான் தமிழ் இலக்கியம் படித்து வருகிறேன்.

பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகம் படிக்கும் போது, அதில் வரும் சிறுகதை, இலக்கியம் சார்ந்த விஷயங்கள் என் பாடம் சார்ந்தும் உதவியாக இருக்கிறது. வாசிப்பு பழக்கம் கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்கிறது.

வாசிப்பு, கண் போன்றது ஜெயபால், மூத்த குடிமகன்: எனக்கு, 87 வயதாகிறது; சிறு வயது முதல், புத்தகம் வாசிக்கிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்கு அல்ல; மாறாக, அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் ஒரு விஷயமாகவே கருதுகிறேன். பக்குவப்பட்ட மனிதனாக வளர்ந்திருக்கிறேன்.

குறிப்பிட்ட விஷயத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள புத்தகங்கள் தான் உதவுகின்றன. ஒரு மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ, அந்தளவு கல்வி முக்கியம். படிக்க படிக்க அறிவாற்றல் பெருகும்; அதற்கு புத்தக வாசிப்பு மிக அவசியம்.

தன்னம்பிக்கை வளரும் ஜெயக்குமார், கார்மென்ட்ஸ் நிறுவன உரிமையாளர், திருமுருகன்பூண்டி: பள்ளி, கல்லுாரி காலத்தில் இருந்தே புத்தகம் படிக்கிறேன். சிறுகதைகளில் இருந்து, புத்தகம் படிக்க துவங்கினேன். பின், தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்களை அதிகம் படிக்க துவங்கினேன். இதனால், எதிர்கொள்ளும் பிரச்னைகளைஎளிதாக கையாளும் பக்குவம் கிடைத்தது.

எந்தவொரு விஷயத்தையும் அடுத்தவரிடம் கேட்டுத் தெளிவுப்படுத்தி கொள்வதை விட, புத்தகங்களை படித்து தெளிவுப்படுத்திக் கொள்வது சிறந்தது. அச்சு வடிவில் வெளியாகும் புத்தகங்களில், உண்மைக்கு மாறான தகவல்கள் பெரும்பாலும் இருக்காது.

படைப்பாற்றல் வளரும் பூங்கொடி, கதை சொல்லி, மடத்துக்குளம்: சிறு வயது முதலே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. இதனால், பாடப்புத்தகங்களை படிப்பது எளிதாகிறது. மனப்பாட சக்தி அதிகரிப்பதை உணர முடிகிறது. வாழ்வியலில் சந்திக்கும் பிரச்னைகளைஎதிர்கொள்ளும் மன உறுதி கிடைக்கும். ஒரே இடத்தில் அமர்ந்து உலக விஷயங்களை விரிவாக, விளக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது.

கதை கேட்கும், குழந்தைகள் வாசிக்க துவங்குகின்றனர்; பின், தங்களின் படைப்பாற்றல், கற்பனையாற்றால் கலந்து எழுத துவங்குகின்றனர்; எழுத்தாளர்களாக மாறுகின்றனர். வாசிக்கும் பழக்கத்தால் நம்மிடம் பழகுபவர்களின் எண்ண ஓட்டத்தை எடை போட முடியும்.






      Dinamalar
      Follow us