ADDED : பிப் 08, 2025 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் 'அனைவருக்கும் அன்பு செய்' நிகழ்ச்சி நடந்தது.
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும், ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில், 16 மாணவர்கள் பங்கேற்று அவிநாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வள மையத்தின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் விளையாடினர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஜூனியர் ரெட் கிராஸ் பொறுப்பாசிரியர் கவிதா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.