தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒள டதம் குறை  

ஒள டதம் குறை  

ஒள டதம் குறை  


ADDED : டிச 09, 2024 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 11:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒளடதம்' என்றால் மருந்து; மருந்து உட்கொள்வதைக் குறைக்கச் சொல்கிறார் பாரதியார்.

திருப்பூர் சித்தா மருத்துவர் ஜெகன்மோகன் கூறியதாவது:

அதிகாலையில் சீக்கிரமாக துயில் எழுவதும், பல் துலக்குவதும், 'கந்தையானாலும் கசக்கிக்கட்டு; கூழானாலும் குளித்து குடி' என்பதற்கு ஏற்ப ஒழுக்கமான உணவு உண்பதும் தான் முதல் மருந்து. பசித்து புசிக்க வேண்டும். ஏப்பம் வரும் வரை மட்டுமே சாப்பிட வேண்டும்; அதன் பின் சாப்பிடக்கூடாது. உணவில் ஒழுக்க முறைகளை பின்பற்ற வேண்டும். நம்மில் பலர் அதைச் சரிவர தொடர்வதில்லை. அதிகமாக பசியெடுத்த பின் சாப்பிடுவது வயிற்றில் பிரச்னைகளை உருவாக்கும்.

ஒவ்வொரு வயதினருக்கும் இரவு சாப்பாடு ஆரோக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் சாப்பிடுகிறோமோ அவ்வளவு எளிதில் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். இரவு, 7:30க்குள் சாப்பிட வேண்டும். இரவு, 11:00 மணியில் இருந்து, அதிகாலை, 4:00 மணி வரை கழிவுகள் வெளியேறும் நேரம்.

சரியான நேரத்துக்கு துாக்கமும், விழிப்பும் கொடுத்தால், கழிவுகள் முழுமையாக வெளியேறும்.உடலை ஆரோக்கியமாக வைக்க, பல்வேறு இயற்கை சார்ந்த உணவுகள் உள்ளது. உணவு முறைகளில் கால ஒழுக்கம் பின்பற்றினால், மருந்து, மாத்திரை வேண்டியதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us