ADDED : மே 06, 2025 06:28 AM
அ நிறம் | அளவு
திருப்பூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., பொது செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு: பெருமாநல்லுார் ஊராட்சி, பனங்காடு, பொடாரம்பாளையம், வலசு பாளையம் பிரிவு, வலசு பாளையம் பிரிவு ரோடு, வெல்டன் சிட்டி, பொரசபாளையம், இ.பி., ஆபீஸ் ரோடு, சி.எஸ்.ஐ காலனி ரோடு, சி.எஸ்.ஐ., காலனி ரோடு சுடுகாடு அருகில் ஆகிய பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் முழுவதுமாக தாவர கொடி படர்ந்து உள்ளது. இரண்டு இடங்களில் மின்கம்பம் சாய்ந்துள்ளது.
ஓரிடத்தில் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது; விபத்து ஏற்படும் முன் மின் வாரிய அதிகாரிகள் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
