தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தாழ்வாக மின் கம்பி; பட்டால் ஆபத்து

தாழ்வாக மின் கம்பி; பட்டால் ஆபத்து

தாழ்வாக மின் கம்பி; பட்டால் ஆபத்து


UPDATED : அக் 11, 2026 05:58 PM

ADDED : அக் 11, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:58 PM ADDED : அக் 11, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடிகால் இல்லை

திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் ரோடு, பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில் மழை பெய்யும்போதெல்லாம் தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

– மணி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

திருப்பூர், பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலகம் முன்புறம் மழைநீர் தேங்குவதால், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

– சரவணன், பல்லடம் ரோடு. (படம் உண்டு)

பல்லாங்குழி ரோடு

திருப்பூர், தாராபுரம் ரோடு, மாகாளியம்மன் கோவில் முன்புறம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுவதால், சாலையைச் சீரமைக்க வேண்டும்.

– பிரியாசுபா, காங்கயம் ரோடு. (படம் உண்டு)

திருப்பூர், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் சாலை சேதமடைந்து குழியாக உள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

– ராஜேந்திரன், லட்சுமி நகர். (படம் உண்டு)

ஆத்துப்பாளையம், ஏ.வி.பி. பள்ளி வீதி குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். சாலையைச் சீரமைக்க வேண்டும்.

– ரம்யா, பாண்டியன் நகர். (படம் உண்டு)

காத்திருக்கும் அபாயம்

கணக்கம்பாளையம் ஊராட்சி, முதல் வார்டு, அய்யம்பாளையம் பொதுக்கழிப்பிடத்தில் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. சுவிட்ச் போர்டும் உடைந்துள்ளது. ஆபத்தைத் தவிர்க்க உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

– சரவணன், கணக்கம்பாளையம். (படம் உண்டு)

சுகாதாரக்கேடு

பழங்கரை, ஆயிகவுண்டம்பாளையம், யுவராஜ் அன்பு அவென்யூ சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும்.

– அன்பழகன், துலுக்கமுத்துார். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், 23-வது வார்டு, சூர்யா காலனி விநாயகர் கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பைச் சீரமைக்க வேண்டும்.

– பரணிதரன், சூர்யா காலனி. (படம் உண்டு)

ரியாக் ஷன்

குழாய் சீரமைப்பு

ஊத்துக்குளி ரோடு, அணைக்காடு பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதாக ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.

– அசோக், அணைக்காடு. (படம் உண்டு)

குப்பை அகற்றம்

திருப்பூர், நெசவாளர் காலனி, ஜவஹர் நகரில் குப்பை தேங்கிக் கிடப்பதாக ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, குப்பை அகற்றப்பட்டது.

– ராஜன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us