/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாதேஸ்வரி மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு பரிசோதனை
/
மாதேஸ்வரி மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு பரிசோதனை
மாதேஸ்வரி மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு பரிசோதனை
மாதேஸ்வரி மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு பரிசோதனை
ADDED : மே 06, 2025 06:37 AM
திருப்பூர்; அவிநாசி, முத்துசெட்டிபாளையம் மெயின் ரோடு பகுதியில் மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில், உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களுக்கான சிறப்பு பரிசோதனை சலுகை கட்டணத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 1ம் தேதி துவங்கி நாளை (7ம் தேதி) வரை நடக்கிறது. சர்க்கரை நோய், அலர்ஜி குடும்ப நலம் மற்றும் நுரையீரல் சிறப்பு டாக்டர் பிரகாஷ் பங்கேற்று தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
சிறப்பு பரிசோதனையில் நுரையீரல் எக்ஸ்ரே, இ.சி.ஜி., ரத்தவியல், நுரையீரல் பாதிப்பு கண்டறிதல் என, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 3,500 ரூபாய் மதிப்பிலான இப்பரிசோதனை, 1,500 ரூபாய்க்கு மேற்கொள்ளப்படுகிறது.
முன்பதிவு, கூடுதல் விபரங்களுக்கு, 99769-38123, 90922-70101 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.