ADDED : செப் 25, 2024 08:39 PM
அ நிறம் | அளவு
உடுமலை : உடுமலை, திருமூர்த்தி மலையில், மா.கம்யூ., கட்சியின் கிளை-2 மாநாடு நடந்தது. கமிட்டி உறுப்பினர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
மாநாட்டில், திருமூர்த்திநகரில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும். 2013ல், ரேஷன் அட்டை பெற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், கிளைச்செயலாளராக உஷாராணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
