ADDED : டிச 01, 2024 11:14 PM

அவிநாசி; மா.கம்யூ., கட்சியின் 24வது திருப்பூர் மாவட்ட மாநாடு, அவிநாசி, தேவாங்கர் மண்டபத்தில் நேற்று துவங்கியது.
கட்சி கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் உன்னிகிருஷ்ணன் ஏற்றினார். மாநாடு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ் தலைமையில் துவங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி வரவேற்றார். மூத்த உறுப்பினர்களுக்கு, மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், சுகுமாரன், மாநில குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .
மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேசுகையில், ''மா.கம்யூ., அகில இந்திய மாநாடு, 2025ல்,ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெற இருக்கிறது'' என்றார்.
மாநாட்டிற்காக அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய செந்தொண்டர் பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கிழக்கு ரத வீதி வடக்கு ரத வீதி வழியாக மாநாட்டு திடலை அடைந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். இன்றும் மாநாடு நடக்கிறது.