ADDED : அக் 30, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் உள்ள காசிக்கவுண்டன்புதுாரில் ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீஅர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராயசாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவில் உள்ளது.
இதன் கும்பாபிஷேக 9ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவை நடந்தன. கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பில், பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

