ADDED : செப் 07, 2025 02:35 AM

திருப்பூர் : திருப்பூர் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று ஆவணி சதுர்த்தசி திதியையொட்டி சிறப்பு அபிேஷக பூஜைகள் நடை பெற்றன.
ஆருத்ரா தரிசனம், சித்திரை - திருவோணம் நட்சத்திரம், ஆனி உத்திரம், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிரை சதுர்த்தசி என ஆறு முறை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
அதன்படி, ஆவணி சதுர்த்தசியான நேற்று மகா அபிஷேகம் நடந்தது. ஸ்ரீ நடராஜப் பெருமான், சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம், பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உட்பட 16 திரவியங்களால் அபிஷேக பூஜையும் அதன் பின் அலங்கார பூஜையும் நடந்தது. சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவாமூர்த்திகள், தேவாரம், திருவாசகம், போன்ற பதிகங்களை பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.