/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
/
ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
ADDED : ஆக 26, 2025 11:16 PM

அவிநாசி; அவிநாசி அருகே முருகம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், 29ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இதற்காக, யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது.
அவிநாசி ஒன்றியம், வஞ்சிபாளையம் - முருகம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில், நேற்று காலை, முதல் கால யாக பூஜை, கணபதி ேஹாமாத்துடன் துவங்கியது.
வரும், 29ம் தேதி காலை, 9.15 மணியளவில் ஸ்ரீ மாகாளியம்மன் கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் 10:00 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமி, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீ நடராஜ சுவாமி, பெங்களூரூ வாழும் கலை குருகுல வேத ஆகம பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் தலைமையில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவகுமார் சர்வசாதகத்துடன் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
விழாவில், இன்று கோபுர விமானத்தில் கலசங்கள் நிறுவுதல், தீர்த்த குட ஊர்வலம், 108 திரவியங்கள் சமர்ப்பணம் ஆகியவற்றுடன் மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை ஸ்ரீ லலித சகஸ்ர நாம வேள்வி, பூர்ணாகுதி, ஸ்ரீ மாகாளியம்மன் யந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் ஐந்து மற்றும் ஆறாம் கால யாக பூஜைகள் நடைபெறுகிறது.
நாளை காலை நிறைவு கால யாக பூஜையில் நாடி சந்தானம், சப்த கன்னி பூஜை,108 மஹா திரவியாகுதி ஆகியவற்றுடன் கிழக்குப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், அதனை தொடர்ந்து எல்லை பிள்ளையார் என அழைக்கப்படும் அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், அதனை தொடர்ந்து அபிஷேகம், தரிசனம், தீபாராதனை நடைபெறுகிறது.
முருகம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை, கோவில் திருப்பணி குழுவினர், விழா கமிட்டியினர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு, 29ம் தேதி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.