
திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் கிராமம், அமுக்கியம் மாணிக்காபுரம் புதுாரில், பொருள்தந்த குல காணியாளர்களின் குலதெய்வமாக, ஸ்ரீகரியகாளியம்மன் கோவில் உள்ளது.
கோவிலருகில், புதிய மண்டபம், குதிரை, சாலக்கோபுரம், முருகன் சன்னதி, கருப்பராயன், கன்னிமார் கோவில்கள் அமைத்து, நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது. விழா, 22ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன், யாகசாலை பூஜைகள் துவங்கியது. தினமும், காலை மற்றும் மாலை வேளையில், யாகசாலை வேள்வி பூஜைகள், வேதமந்திரங்களுடன் நடந்தது.
நேற்று அதிகாலை, நான்காம் கால வேள்வி பூஜை நிறைவடைந்து, கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டன. தொடர்ந்து, காலை, 9:15 மணி முதல், 10:15 வரை, விநாயகர், கரியகாளியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிேஷகம் நடந்தது. மகா அபிேஷகம், அலங்கார பூஜைகளை தொடர்ந்து, தசதானம், தச தரிசன காட்சிகள் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.