/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் மகா சமாதி திருநாள்
/
ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில் மகா சமாதி திருநாள்
ADDED : அக் 03, 2025 09:13 PM

உடுமலை; உடுமலை தில்லை நகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், ஸ்ரீ சாயிபாபா 107ம் ஆண்டு மகா சமாதி திருநாள் மற்றும் நவராத்திரியையொட்டி சிறப்பு ேஹாமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
கோவிலில், சிறப்பு பூஜைகள் கடந்த வாரம் துவங்கியது. நாள்தோறும் கொலு அரங்கில், சிறப்பு பூஜை ஆரத்தி நடைபெற்றது.
நேற்று முன்தினம் சீரடி சாயிபாபாவின், 107ம் ஆண்டு மகா சமாதி திருநாளையொட்டி, அவரது சத்சரிதம் முழுவதும் பாராயணம் செய்தனர். தொடர்ந்து காலை, 6:30 மணி முதல் சிறப்பு ேஹாமம், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
கூட்டுப்பிரார்த்தனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோட்புக், பேனா, பென்சில் போன்றவை அறக்கட்டளை வாயிலாக வழங்கப்பட்டது.