/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவாலயங்களில் ஓங்கி ஒலித்த 'ஓம் நமசிவாய' பிரதோஷ பூஜையுடன் மகா சிவராத்திரி வழிபாடு
/
சிவாலயங்களில் ஓங்கி ஒலித்த 'ஓம் நமசிவாய' பிரதோஷ பூஜையுடன் மகா சிவராத்திரி வழிபாடு
சிவாலயங்களில் ஓங்கி ஒலித்த 'ஓம் நமசிவாய' பிரதோஷ பூஜையுடன் மகா சிவராத்திரி வழிபாடு
சிவாலயங்களில் ஓங்கி ஒலித்த 'ஓம் நமசிவாய' பிரதோஷ பூஜையுடன் மகா சிவராத்திரி வழிபாடு
ADDED : மார் 09, 2024 08:06 AM

திருப்பூர் : சிவாலயங்களில், 'ஓம் நமசிவாய' கோஷம் ஒலிக்க, மகா சிவராத்திரி விழா, பிரதோஷ வழிபாட்டுடன் கோலாகலமாக நடைபெற்றது.
சிவாலயங்களில், மாசி மாதம் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள், இரவு முழுவதும் துாங்காமல், சிவாலயங்களில் நடக்கும் நான்குகால பூஜைகளை கண்டு வணங்கி, விரதத்தை பூர்த்தி செய்வது வழக்கம். நேற்று பிரதோஷ வழிபாட்டுடன், சிவராத்திரி துவங்கியது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு துவங்கியது. மூலவர், அதிகார நந்தி, உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி உமா மகேஸ்வரர், வெளிபிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தொடர்ந்து மாலை, 7:00 மணி; இரவு, 10:30 மணி; நள்ளிரவு, 12:20 மணி; அதிகாலை, 4:30 மணி என, நான்கு கால சிவராத்திரி அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. நள்ளிரவு பூஜையின் போது, மூலவருடன், லிங்கோத்பவருக்கும் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் ஆவுடைநாயகி உடனமர் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் தில்லைநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்; குட்டகம், மீனாட்சியம்மன் உடனமர் ஸ்ரீமொக்கணீஸ்வரர் கோவில்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில், ஊத்துக்குளிரோடு காசி விஸ்வநாதர் கோவில், கருமாரம்பாளையம் பரமசிவன் - வாராஹியம்மன் கோவில், மாணிக்காபுரம் மரகாதம்பிகை சமேத மெய்ப்பொருள் நாதசுவாமி கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் நடந்தது.
சிவராத்திரி விரதம் இருந்த பக்தர்கள், நான்கு கால பூஜைகளில் பங்கேற்றனர்; ஒவ்வொரு பூஜையின் நிறைவாக, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவனடியார்கள், சிவபக்தர்கள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட, பன்னிருதிருமுறை பாராயணம் செய்தும், சிவபூஜை செய்தும் எம்பெருமானை நினைந்து வழிபட்டனர்.