/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தர்மம் காக்க உதவும் மகாபாரதம்! ஆன்மிக விழாவில் பேச்சு
/
தர்மம் காக்க உதவும் மகாபாரதம்! ஆன்மிக விழாவில் பேச்சு
தர்மம் காக்க உதவும் மகாபாரதம்! ஆன்மிக விழாவில் பேச்சு
தர்மம் காக்க உதவும் மகாபாரதம்! ஆன்மிக விழாவில் பேச்சு
ADDED : செப் 23, 2025 08:25 PM

உடுமலை, ;''தள்ளாடும் தர்மத்தை மீண்டும் உயர்த்த மகாபாரதத்தை அனைவரும் படிக்க வேண்டும்,'' என ஆன்மிக பேச்சாளர் சுபாசு சந்திரபோசு பேசினார்.உடுமலை நேருவீதி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி தொடர் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதில், 'பூபாரம் தீர்த்த புயல் வண்ணன்' என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் சுபாசு சந்திரபோசு பேசியதாவது:
இந்தியா ஒரு ஞான பூமி. 'ஊனமொன்று அறியா ஞான நாட்டிடை உதித்தீர்,' என மகாகவி பாரதி பாடியுள்ளார்.
ஞான பூமியாக பொலிவதற்கு, ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களே காரணமாகும். இப்படித்தான் வாழ வேண்டும் என உணர்த்துவது ராமாயணம்; எப்படி எல்லாம் வாழக்கூடாது என வலியுறுத்துவது மகாபாரதம்.
நாம் வாழும் கலியுகத்தில் தர்மம் தளர்ந்து தள்ளாடி வருகிறது. மீண்டும் தர்மத்தை நுாறு விழுக்காடாக உயர்த்தினால் மட்டுமே உலகம் உய்ய முடியும்.மகாபாரதத்தில் பேசப்பெற்ற அளவு தர்மங்கள், வேறு எந்த நுாலிலும் பேசப்படவில்லை.
மனிதரை வாழ்வாங்கு வாழ செய்யவும், கிருதயுகத்தை எழ செய்யவும், கலியுகத்தில் கண்டிப்பாக படிக்க, கேட்கப்பட வேண்டிய நன்னுால் மகாபாரதம் ஆகும்.
இவ்வாறு, அவர் பேசினார்.