/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாராஷ்டிரா கவர்னர் வழிபாடு
/
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாராஷ்டிரா கவர்னர் வழிபாடு
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாராஷ்டிரா கவர்னர் வழிபாடு
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஹாராஷ்டிரா கவர்னர் வழிபாடு
ADDED : ஆக 01, 2025 10:41 PM

அவிநாசி; கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அவிநாசி தேவாரம் அருளிய ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நால்வர் பெருமக்கள் உட்பட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மஹாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், அவிநாசி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
கவர்னரை, கோவில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அதன்பின், சுவாமி தரிசனம் செய்த கவர்னரை, அவிநாசி பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்தனர். கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், முன்னாள் அறங்காவலர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, கரூர் சாமிநாதன் தலைமையில், ஓதுவாமூர்த்திகள், தேவார பண்ணிசைத்தனர்.