/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாகுபடிக்கு தேவையான விதை உற்பத்தி; சின்னவெங்காயத்துக்காக பராமரிப்பு
/
சாகுபடிக்கு தேவையான விதை உற்பத்தி; சின்னவெங்காயத்துக்காக பராமரிப்பு
சாகுபடிக்கு தேவையான விதை உற்பத்தி; சின்னவெங்காயத்துக்காக பராமரிப்பு
சாகுபடிக்கு தேவையான விதை உற்பத்தி; சின்னவெங்காயத்துக்காக பராமரிப்பு
ADDED : பிப் 17, 2025 11:01 PM

உடுமலை, ; சின்னவெங்காய சாகுபடிக்கு தேவையான விதைகளை தாங்களாகவே உற்பத்தி செய்து உடுமலை வட்டார விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடியாகிறது. பிற காய்கறி சாகுபடிகளை விட சின்ன வெங்காயத்துக்கு அதிக செலவாகிறது.
நாற்று மற்றும் விதை என இருமுறைகளை பின்பற்றி நடவு செய்கின்றனர். சில விவசாயிகள் சீசனுக்கு முன்பாக தாங்களாகவே விதை உற்பத்தி செய்து, நாற்றாங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்கின்றனர். இதனால், சாகுபடி செலவு வெகுவாக குறைகிறது என தெரிவிக்கின்றனர்.
விதை உற்பத்திக்காக விளைநிலங்களில், சின்ன வெங்காய பயிர்களை குறித்த நேரத்தில், அறுவடை செய்யாமல், பூக்க விடுகின்றனர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: விதை தேவைக்காக, பராமரிக்கப்படும் சின்னவெங்காய பயிர்களின் பாத்திகளை பராமரிக்க தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்ற வேண்டும். அப்பாத்திகளில் குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசியத்தில் இருந்து மாறுபட்டு தெரியும், எல்லா பயிர்களையும், களைகளையும், அகற்ற வேண்டும்.
செடிகளின் உயரம், இலை, பூங்கொத்தின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மையை கொண்டு கலவன்களை நீக்கலாம். இதனால், தரமான விதை கிடைப்பதுடன், ரகத்தின் பாரம்பரிய தன்மையை பாதுகாக்கலாம்.
விதை அறுவடை தருணத்தில், பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில், பூங்கொத்துகளை மட்டும், அறுவடை செய்து, சாக்கு பைகளின் மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும். இதனால், தரமான விதை கிடைக்கும்.
இவ்வாறு, கூறினர்.

