/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாய சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
/
சாய சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
சாய சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
சாய சுத்திகரிப்பு மையங்களில் பராமரிப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜன 16, 2026 05:44 AM
திருப்பூர்: பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி, சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்கள், பராமரிப்பு பணிகளை துவக்கியுள்ளன.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 18 சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. இம்மையங்கள், சாய ஆலைகளின் கழிவுநீரை, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கூடிய பின்னலாடை ஆடை உற்பத்திக்கு கை கொடுக்கும் இம்மையங்கள், ஓய்வின்றி, முழு நேரமும் இயங்கி, சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பது அவசியமாகிறது.
பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலை உள்பட ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களில் தொடர் விடுமுறை விடப்படுகிறது. இவ்விரு பண்டிகை கால விடுமுறை நாட்களை சாதகமாக பயன்படுத்தி, சுத்திகரிப்பு மையங்கள், வழக்கமான இயக்கத்தை நிறுத்தி, பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பின்னலாடை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொது சுத்திகரிப்பு மையங்கள், கடந்த 14 முதல், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பை நிறுத்தியுள்ளன.
சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக்காக ஓய்வின்றி இயங்கி, தேய்ந்த மோட்டார்கள், குழாய்களை மாற்றுவது; பழுதுகளை கண்டறிந்து சரி செய்வது உள்பட சுத்திகரிப்பு மைய பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. சுத்திகரிப்பு மையங்கள் அடுத்த தீபாவளி பண்டிகை வரை, எவ்வித இடை நிறுத்தமும் இன்றி, திறம்பட இயங்கச் செய்யும்வகையில், தொழில் நுட்ப குழுவினர், திறம்பட பணிபுரிந்து வருகின்றனர்.
பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, வரும் 19 முதல், பொது சுத்திகரிப்பு மையங்களின் இயக்கத்தை மீண்டும் துவக்க சாய ஆலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

