/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய விலையில் மக்காச்சோளம்; தொகுப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானிய விலையில் மக்காச்சோளம்; தொகுப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் மக்காச்சோளம்; தொகுப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய விலையில் மக்காச்சோளம்; தொகுப்பு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 05, 2025 11:57 PM
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் பயிர் சாகுபடி பரப்பு மற்றும் மகசூல் அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காச்சோளம் தொகுப்பு வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில், கண்ணாடிபுத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், குமரலிங்கம் உள்ளிட்ட, அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற கிராமங்களில், மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், ஏறத்தாழ, 6,250 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
மக்காச்சோளம் கோழி, மாட்டுத்தீவனத்தில் பிரதானமாக உள்ளதோடு, நிலையான வருவாய் கிடைப்பதால் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், தேவை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, மக்காச்சோளம் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையிலும், உயர் மகசூல் கிடைக்கும் வகையிலும், வேளாண் துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மக்காச்சோளத்தில், பல வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக அதிக மகசூல் பெறப்படுகிறது.
நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி பரப்பினை அதிகரிக்க, வீரிய ஒட்டு ரக விதைகள், திரவ நுண்ணுாட்ட உரங்களாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நானோ யூரியா மற்றும் அங்கக உரங்கள் கொண்ட தொகுப்பு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 1,100 ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி மேற்கொள்ளும் வகையில், மானிய விலை மக்காச்சோளம் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நி லையில், சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் மக்காச்சோளம் விதைகள் அடங்கிய தொகுப்பினை வாங்கி பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, வேளாண் உதவி அலுவலர்கள், பாலு - 81480 11695; சிம்சோன் - 97877 79884; ராஜசேகரன் - 96261 62333; சுனிதா - 85080 37096; சுந்தரம் - 96296 39421 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, ஆதார், சிட்டா நகல்களை கொடுத்து, பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.