ADDED : பிப் 07, 2025 09:30 PM
உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
விவசாயிகள் மக்காச்சோளத்தை உடுமலை ஒழுங்கு முறைவிற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், தினமும் மக்காச்சோளம் ஏலம் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, 3 விவசாயிகளின், 290 மூட்டை அளவுள்ள, 17.513 டன் மக்காச்சோளம் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.
இ-நாம் திட்ட ஏலத்தில், ஒரு குவிண்டால் மக்காச்சோளம், ரூ. 2,350 முதல், ரூ. 2,400 வரை ஏலம் போனது. இதன் மதிப்பு, 4 லட்சத்து, 18 ஆயிரத்து, 931 ரூபாயாகும், மேலும் விபரங்களுக்கு,விற்பனைக்கூட கண்காணிப்பாளர், செந்தில்குமார், 94439 62834 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.